வசந்தி ஸ்டான்லி மரணத்தில் மர்மம்! அப்பலோவை நோக்கி பாயும் பகீர் புகார்!

அப்பல்லோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லியின் மரணத்தின் பின்னே மரணம் இருப்பதாக ஆர்.கே.ராதாகிருஷ்ணன் குரல் எழுப்பியிருக்கிறார்.


தி.மு.க. சார்பில் கடந்த் 2008 முதல் 2014 வரை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றிய வசந்தி ஸ்டான்லிக்கு வழக்கறிஞர், எழுத்தாளர், சமூகப் போராளி என பல முகங்கள் உண்டு. திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழக சிறுபான்மை ஆணையராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவர் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாகவே உடலில் பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக முறைப்படி சிகிச்சை எடுத்துவந்தார். கருப்பை அகற்றம் செய்யவேண்டும் என்று சொன்னதைக் கேட்டு, அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிக்கொண்டார். அந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் தொற்று ஏற்பட்டதுதான் அவர் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

56 வயதே ஆன வசந்தி ஸ்டான்லிக்கு கருப்பை எடுக்கவேண்டிய அவசிய்ம் இல்லை என்றும், பணத்துக்காகவே அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கவைத்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்ததும் வரம்புக்கு மீறியதாக கருதப்படுகிறது. அதனால், வசந்தி ஸ்டான்லி மரணத்திற்குப் பின்னே இருக்கும் மரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

ஜெயலலிதா மரணத்துக்கே இன்னமும் காரணம் கண்டுபிடிக்காதவர்கள், இதற்கு மட்டும் சொல்லிவிடப் போகிறார்களா என்ன?