உலகின் 2வது மிகப்பெரிய அபாயகரமான குற்றவாளி! பொறி வைத்து பிடித்த போலீஸ்!

அபாயகரமான குற்றவாளியை போலீசார் துப்பாக்கிச் சண்டை, மோதல் இன்றியே பிடித்தனர்.


இத்தாலியின் கமோரா என்பது என்பது கொலை, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, தீவிரவாதம், பாலியல் தொழில் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய நிழல் உலக அமைப்பாகும் . அதன் தலைவரான பாலோ டி லாரோ கடந்த 2005-ஆம் ஆண்டு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவரது 10 மகன்களில் 4-வது மகனான மேக்ரோ டி லாரோ கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தப்பியொடிய நிலையில் அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நேப்பிள்ஸ் நகரில் வசித்து வந்த மேக்ரோ டி லாரொவை பிடிக்க அந்நகர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் மேக்ரோ டி மாரோவைப் பிடிக்க அண்மையில் சுமார் 150 போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். மேக்ரோவின் கடும் துப்பாக்கிச் சண்டை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்று எதுவும் செய்யாமல் தனியாக இருந்த மேக்ரோ, தனது இரண்டு பூனைகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

மேக்ரோவை கைது செய்தபின் அவரது பிளாட்டில் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை என்றும் சிறிதளவுப் மட்டுமே சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.