மனைவியின் மகளுடன் கட்டாய வல்லுறவு..! நள்ளிரவில் திருவாரூர் சின்னப்பா அரங்கேற்றிய கொடூரம்!

பாலியல் பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரில் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கணவரை பிரிந்து வாழும் பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அந்தபெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். 2வதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் கூலித்தொழிலாளிக்கும் ஒரு பெண் குழந் பிறந்துள்ளது.

இந்நிலையில் 2வது மனைவியின் 17 வயது மகள் மீது தந்தைக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமையில் இருக்கும்போதேல்லாம் மகளை பலவந்தப்படுத்த முயற்சித்துள்ளார் தந்தை. இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்த மகளை நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரமே செய்து விட்டார்.  

இதனால் வேதனை அடைந்த அந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மீன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விசாரித்ததில் தாயை திருமணம் செய்து கொண்ட நபர்தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமி திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தந்தை மீது புகார் அளிக்க அவர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தது போலீஸ். அடுத்தவரின் மனைவியின் வாழ்க்கையை பங்குபோட நினைக்கும் பெண்களுக்கும், வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக்கொண்டு ஆண் துணையை தேட நினைக்கும் பெண்களுக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் எச்சரிக்கை மணியாகவே இருக்கிறது.