சிக்கலில் சென்னை கிரேஸ் சூப்பர் மார்க்கெட்! பிரமாண்ட குடோனுக்கு சீல்! பகீர் காரணம்!

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கிரேஸ் சூப்பர் மார்கெட்டுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.


சென்னை நகரின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருவது கிரேஸ் சூப்பர் மார்க்கெட். சென்னை அடுத்த திருவேற்காட்டில் கிரேஸ் சூப்பர் மார்க்கெட்டின் பிரமாண்ட குடோன் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து தான் கிரேஸ் சூப்பர் மார்கெட்டுக்கான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில்  திருவேற்காடு அருகே இருக்கும் நூம்பலில் உள்ள கிடங்கு மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய தொழில் உரிமம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதுபிக்காமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று கிடங்கில் திடீரென உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தொழில் உரிமம் புதுபிக்காமல் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், கிடங்கு செயல்படுவதற்கான உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சீல் வைக்கப்பட்டகுடோனுக்குள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.