திருவனந்தபுரம்: குழந்தையை மருத்துவமனை அழைத்துச் சென்ற பெற்றோரை போராட்டக்காரர்கள் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு உடல் நலக்கோளாறு! ஹாஸ்பிடலுக்கு விரைந்த பெற்றோர்! ஆனால் காரை மறித்து SDPI கட்சியினர் அரங்கேற்றிய அராஜகம்! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். சாலைகளில் செல்லும் வாகனங்கள், ரயில் உள்ளிட்டவை மீது கற்கள் வீசி போராட்டக்காரர்கள் தாக்குவதால், பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கேரள மாநிலத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் பத்தனம்திட்டா, மலப்பள்ளி பகுதியில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றை மருத்துவ பரிசோதனைக்காக, அதன் பெற்றோர் காரில் அழைத்துக் கொண்டு, அவ்வழியே வந்தனர். ஆனால், அவர்களை போக விடாமல் எஸ்டிபிஐ கட்சியினர் வழிமறித்துள்ளனர்.
உடல்நலம் பாதித்த குழந்தை கதறியழ, அதுபற்றி கவலைப்படாமல் போராட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனை குழந்தையின் தந்தை அருண் என்பவர் செல்ஃபோனில் வீடியோ எடுத்திருக்கிறார். அப்போதும் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல் பேசினர். இந்த வீடியோவை அவர் சமூக ஊடகங்களில் பகிர பலராலும் வைரலாக பரவ தொடங்கியது.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் அந்த காரை செல்ல வழி கொடுத்து, ஒதுங்கிச் சென்றனர். குழந்தையின் உயிருடன் முரட்டுத்தனமாக விளையாடிய அந்த போராட்டக்காரர்களுக்கு, சமூக ஊடகங்களில் கண்டனம் குவிந்து வருகிறது.