அரசுப் பள்ளிக்கூட கழிவறைக்கு சென்ற 2 மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

நாமக்கல் மாவட்டம் பொட்டி ரெட்டிப் பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வருகின்றனர். பள்ளியின் கழிவறை சுவருகள் ஏற்கனவே பழுதாகி இருந்த நிலையில்,


இன்று எதேர்ச்சியாக பள்ளி கழிவரைக்கு சென்ற மாணவிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவிகள் படுகாயமடைந்தனர்,. உடனடியாக மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனர்.

மாணவிகளுக்கு நியாயம் கேட்டு மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து விசாரணை நடத்திய பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை அலட்சியமாக செயல்பட்டது தான் காரணம் என குற்றம் சாட்டியதை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.