கன்னியாகுமரி மாவட்டை சேர்ந்த அந்தோணி ஜெனிஃபர் (27) திருமணம் ஆகாதவர்.
வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியர்! சன் பீம் பள்ளியில் பகீர் சம்பவம்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்ரையில் உள்ள தனியார் பள்ளியில் (சன் பிம் மெட்ரிக்குளோசன் மேல்நிலை பள்ளி) 8 மற்றும் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்ளுக்கு கடந்த ஓராண்டாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் பள்ளியின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது, இன்று வழக்கம் பள்ளிக்கு வந்த பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு சென்ற போது ஆசிரியர் அந்தோணி ஜெனிஃப்பர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட அதிர்ச்சியடைந்தனர்
உடனடியாக இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நீலாங்கரை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி ஆசிரியரின் உடலை மீட்டு உடற்க்கூறு ஆய்வுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மேலும் ஆசிரியர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி நிர்வாகத்திடம் ஏற்பட்ட மோதலால் தூக்கிட்டு தற்க்கொலை செய்து கொண்டாரா ? அல்லது குடும்ப சூழல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.