கல்யாணமாகி நான்கே மாதத்தில் குழந்தை! இளம் ஆசிரியைக்கு பள்ளிக்கூடத்தில் நேர்ந்த விபரீதம்!

கேரள மாநிலம் மலப்புரத்தில் திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை பெற்ற பெண்ணை மீண்டும் பணியில் சேர பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்து.


தனது பிரசவம் வரை கோட்டக்கல்லில் உள்ள முனிசிபல் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்ததாகவும், பிரசவத்தில் இருந்து 3 மாதங்கள் விடுப்பு எடுத்ததாகவும், அந்தப் பெண் கூறியுள்ளார். இந்நிலையில் விடுப்பு முடிவதற்கு சில நாட்களுக்கு முன் பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்ட போது, பணியில் மீண்டும் சேர வரவே வேண்டாம் என அவர் கூறியதால் தான் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார். 

தனது முதல் கணவனுடனான விவாகரத்து நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டதால், தனது 2-வது கணவனுடன் திருமணத்துக்கு முன்னரே சேர்ந்து வாழ்ந்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொண்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

இதனால் தனக்கு 4வது மாதத்தில் குழந்தை பிறந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனைக் கொண்டு தன்னை மோசமான் பெண் போல் உருவகப்படுத்தி தன்னை பணியில் சேர விடாமல் தடுக்க மூயற்சிகள் நடப்பதாகவும், தனக்கு பலருடன் தொடர்பு இருப்பது போல உருவகப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி தலைமை ஆசிரியர் அந்தப்பெண் பள்ளியில் நிரந்தர ஊழியரே அல்ல என மறுத்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு தாய் - தந்தை இல்லாத நிலையில் ஏழ்மை நிலையைக் கருதி பள்ளியில் சிறு வகுப்புக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஆயாவாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குழந்தைகளிடம் மோசமான முறையில் அந்தப் பெண் நடந்துகொண்டதாக புகார் வந்த நிலையில் அந்தப் பெண்ணும் பிரசவ விடுமுறை கேட்டதால் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின் பள்ளியில் சேர்க்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.