வீடெங்கும் ரத்தச் சிதறல்! கணவன் குழந்தையுடன் கர்ப்பிணி கொடூர கொலை! பரபரப்பு பின்னணி!

மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் இவர் அங்கு உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பியூட்டி என்ற மனைவியும் அங்கன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் மூவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அருகிலிருந்தவர்கள் உடனே காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர்கள் மூவரும் கடுமையான ஆயுதத்தால் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை காவல்துறையினர் முடிவு செய்தனர்.  

இந்த கொலை வழக்கில் கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் காவல்துறையினர் விசாரணையில் கோபால் அரசியல் ஈடுபாட்டில் அதிகளவில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிரிகள் அவரை கொலை செய்து விட்டதாக முதலில் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் இப்போது தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே மூவரும் ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோபால் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகவும் செயல்பட்டு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது இந்நிலையில் பண நெருக்கடி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கத்துடன் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதுகுறித்து 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அதில் 2 பேர் குற்றவாளிகள் அல்ல என உறுதி செய்து அவர்களை விடுதலை செய்துள்ளனர். மேலும் 2 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.