ஆசிரியைகளின் எச்சில் பாத்திரத்தை கழுவும் மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்!

தஞ்சாவூரில் அரசு உதவிப் பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் உணவுக் கொண்டுவரும் பாத்திரங்களை மாணவிகள் கழுவும் போது எடுக்க்பட்ட காட்சிகள் பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை, கொத்தங்குடியில் உள்ள கணேசமூர்த்தி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வெறும் 45 மாணவ-மாணவிகள் படித்து மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக தையல் நாயகி இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், பயிலும் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகள், ஆசிரியர்கள் மதியம் சாப்பிட்ட உணவு பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தும் வீடியோ காட்சிகள்,மிக வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கேள்விக்கு பள்ளி தலைமை ஆசிரியர்,  தையல்நாயகி  எப்பொழுதும் மாணவர்களுக்கும் சேர்த்துப்தான் உணவு வீட்டில் இருந்து கொண்டுவருவோம் எனவும் , சாப்பிட்ட பின்னர் அந்த பாத்திரத்தை எப்பொழுதும் போல கழுவி தருவார்கள் எனவும் தெரிவித்தவர். வேண்டும் என்றே சில விஷமிகள் இதுப் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த நிலையில் வீடியோ குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன் சம்மந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதுடன், விசாரணை நடத்தினார்.