4 வருடமாக கட்டாய வன்புணர்வு! வகுப்பின் முதல் மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததன் அதிர்ச்சி பின்னணி!

சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறப்பாக படித்த மாணவி 11-ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் அது குறித்து பள்ளி முதல்வர் விசாரித்த போது இருவர் அந்தச் சிறுமியை 4 ஆண்டுகளாக கூட்டுப் பாலியல் பலாத்கார்ம் செய்ததாக தெரிய வந்தது.


6-ஆம் வகுப்பு வரை சிறப்பாக படித்து முதல் மாணவியாகவும் சூட்டிகையான சிறுமியாகவும் இருந்த அந்த மாணவியின் போக்கில் அதன் பிறகு மாற்றம் தெரிந்தது. படிப்பில் ஆர்வம் இல்லாமலும் மந்தமாகவும், உற்சாகம் இன்றியும் மாறத் தொடங்கினார். அது குறித்து கேள்வி கேட்ட அனைவரிடமும் அந்தச் சிறுமி எதுவும்கூறவில்லை.

இந்நிலையில் 11-ஆம் வகுப்புத் தேர்விலும் அந்த மாணவி தோல்வி அடைந்ததை அடுத்து அது குறித்த காரணத்தைக் கேட்டு பள்ளி முதல்வர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதலில் எதுவும் சொல்ல மறுத்த அந்தச் சிறுமி பின்னர் மனம் உடைந்து அழத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த மாணவி வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சிக்குரியவை.

6-ஆம் வகுப்பில் படித்த போது வீட்டுக்கு அருகிலுள்ள நபர் தனது பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் கையில் சாக்லெட்டுடன் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அப்போது அந்த நபர் தன்னை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். 

அதன் பிறகு தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போதெல்லாம் அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்த அந்தச் சிறுமி பிறகு அந்த நபர் வேறு ஒரு நபரையும் அழைத்து வந்ததாகவும், இருவரும் அதன் பிறகு தன்னை அவ்வப்போது கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.

இதனை வெளியில் தெரிவித்தால் கடூம் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என இருவரும் மிரட்டியதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக பள்ளி சார்பில் காவல் நிலையத்தில் தெரிவிக்கபட்டதையடுத்து இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.