நாகை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீர் கழிக்கச் சென்ற சிறுமியை தூக்கிச் சென்று..! 3 பேர் மாறி மாறி..! சீர்காழியில் பதைபதைப்பு சம்பவம்!
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சித்தன் காத்திருப்பு வடக்கு பகுதியில் வசித்து வருபவர் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஆஷிகா 15, என்ற மகளும் உள்ளார் பவானி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாலை வேளையில் மாணவி வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் தனது தாய்க்கு உதவியாக சில வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டு கொல்லைப்புறமாக தனிமையில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு பின் புறத்திற்கு சென்ற பவானி நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வராததால் அவரது தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் சத்தமாக கூப்பிட்டும் மாணவியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராத நிலையில் அவரது தாய் வீடு வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு புதரின் அடியில் பவானி பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது ஆஷிகாவின் உடலில் உள்ள காயங்களை வைத்து பார்க்கும்போது கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு தான் மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார்.என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமார் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகித்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பலாத்காரம் செய்து மாணவியை கொலை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.