குடும்பம் நடத்த வர மறுத்த தலைமை ஆசிரியை! வகுப்பிற்கு சென்று கணவன் அரங்கேற்றிய கொடூரம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பள்ளி முதல்வரை கோடாரியல் வெட்டிக்கொன்ற முன்னாள் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.


கோண்டியா மாவட்டம் இர்ரிடோலா என்ற இடத்தில் உள்ள அரசு பள்ளியின் முதல்வராக இருந்தவர் 51 வயது பிரதிபா டோங்ரே. கடந்த செவ்வாய்க் கிழமை பள்ளிக்கு வந்த அவரது கணவன் திலீப் டோங்ரே, பிரதீபாவின் அறைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

ஆத்திரம் முற்றிய நிலையில் அந்த நபர் கோடரியால் தாக்கியதில் பிரதிபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த நபர் தப்பியோடிய நிலையில், கொலை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குடிகாரனான திலீப் டோங்ரே மது அருந்துவதற்காக பணம் கேட்டு பிரதிபாவிடம் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுபோன்ற பிரச்சினைகளால் இருவரும் கடந்த ஜனவரி மாதமே பிரிந்துவிட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள திலீப்பை போலீசார் தேடி வருகின்றனர்