உடையில் மாதவிடாய் கறை! பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு நேர்ந்த அவமானம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கென்யாவில் வகுப்பறையில் மாதவிடாய் ரத்தக்கறையை காரணம் காட்டி வகுப்பு ஆசிரியை மாணவியை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி பகுதியில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது மாணவிக்கு பள்ளி நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த மாணவியிடம் சானிட்டரி நாப்கின் இல்லாததால் ரத்தக்கரை உடையில் படிந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை அவமானப்படுத்தியுள்ளார்.

மற்றும் அசுத்தமானவள் எனவும் வகுப்பறையை விட்டு வெளியே சென்று விடு என கடுமையாகவும் நடந்து கொண்டுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி வீடு திரும்பி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி கதறி அழுதுள்ளார். அதன் பிறகு பெற்றோரிடம் அந்த மாணவி பேசாமல் இருந்துள்ளார்.

பின்னர் தண்ணீர் குடிக்க செல்கிறேன் என கூறிவிட்டு சென்ற மாணவி தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். 

 இந்நிலையில் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் அந்த பள்ளி ஆசிரியை தான் என அந்த ஊர் மக்கள் சுமார் 200 பேர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தை கைவிடுமாறு பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்காத பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இறுதியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கென்யாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இலவச சானிடரி நாப்கின் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனாலும் பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் இன்னும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.