தலித் கன்னியாஸ்திரிக்கு செ**ஸ் டார்ச்சர்..! சர்ச்களில் நடைபெறும் அந்தரங்க விஷயங்கள் அம்பலம்!

கொச்சி: பாலியல் குற்றச்சாட்டு கூறிய கன்னியாஸ்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


கொச்சி, பச்சாலம் பகுதியில் செயிண்ட் ஜோசஃப் ப்ரோவின்சியிலேட் கான்வென்ட் செயல்படுகிறது. இங்கு, கடந்த 11 ஆண்டுகளாக, கன்னியாஸ்திரியாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், சமீபத்தில், தனக்கு பாலியல் தொந்தரவு தரப்படுவதாக, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அவரை கான்வென்ட் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

பிறகு, தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் அப்பெண்ணிற்கு, கான்வென்ட் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் தரப்படுவதாக, தெரியவந்துள்ளது. பிஷப் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்கார வழக்கில், இந்த கன்னியாஸ்திரியின் சாட்சியம் மிக முக்கியமானதாக உள்ளது.

எனவே, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம், 11 ஆண்டுகள் பணிபுரிந்து கன்னியாஸ்திரிக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அவரை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து பச்சாலம் கான்வென்டை முற்றுகையிட்டு, கேரள கத்தோலிக் சர்ச் சீர்திருத்த இயக்கத்தினர் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.