அப்பா மாவட்டத்திற்கே கலெக்டர்..! மகள் படிப்பதோ சிறிய அரசுப் பள்ளியில்! நெகிழ வைக்கும் சம்பவம்! சூப்பர் காரணம்!

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்க வைப்பார்கள் என பல்வேறு தரப்பினர் அவ்வப்போது எழுப்பும் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஒருவர்.


சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும் அவனீஷ் ஷரன் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக திகழ்ந்துள்ளார். இதை அடுத்து அந்த ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

2009ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவனீஸ் ஷரன் சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது குழந்தை வேதிகா ஷரனை அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் சேர்த்து இருக்கிறார். தனது மகள் அரசு பள்ளியில் சீருடையில் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவனீஷ் ஷரன்.

சாதாரண வேலை செய்பவர்கள் கூட தன்னைப் போலவே தன்னுடைய பிள்ளைகளும் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அரசுப் பள்ளியின் தரத்தை நம்பால் பட்டினி கிடந்தாவது தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் நன்றாக கற்றுக் கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காகவும் தனியார் பள்ளியில் பல லட்சங்களை கொட்டி படிக்க வைக்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சியர் ஒருவர் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்ததை பார்த்த பொதுமக்கள் பாராட்டியது மட்டுமின்றி, உங்களை போல் எல்லா அரசு அதிகாரிகளும் முடிவு எடுத்தால் நிச்சயம் அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்று கூறியுள்ளனர்.