நான்கு வேட்பாளர்களையும் திட்டித் தீர்த்த பிரேமலதா! அதிர்ச்சியில் சுதீஷ்!

தேர்தல் ஓட்டுப் பதிவு முடிந்ததும், அப்பாடா என்று தே.மு.தி.க. வேட்பாளர்கள் ஹாயாக ஓய்வு எடுத்து வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கேப்டன் பெயரில் திடீரென அழைப்பு போனது. உடனே நடுங்கிக்கொண்டுதான் நான்கு பேரும் போனார்கள்.


வேட்பாளர்களுடன் சுதீஷும் நிறுத்தப்பட்டு, தொகுதி நிலவரம் எப்படியிருக்கிறது, வெற்றி வாய்ப்பு குறித்து பிரேமலதா கேட்டிருக்கிறார். சுதீஷ் மட்டும் கொஞ்சம் நம்பிக்கையாக பதில் கொடுக்க, மற்ற அனைவரும் சுணங்கி அமைதி காத்திருக்கிறார்கள்.

ஏனென்று பிரேமலதா கேட்டதும், நமக்கு யாரும் பெருசா ஹெல்ப் பண்ணலை. கூட்டணிக் கட்சிங்க எல்லாம் நம்மகிட்டத்தான் காசு கேட்டாங்க, குடுத்த காசை எடுத்துட்டு ஓடிட்டாங்க என்று முனகியிருக்கிறார்கள்.

உடனே டென்ஷனான பிரேமலதா, ‘இதை தேர்தல் களத்தில் நிற்கும்போது சொல்ல மாட்டீங்களா? உங்க தொகுதிக்கு பிரசாரம் செய்ய வந்தபோது சொல்ல மாட்டீங்களா? அப்போ எல்லாம்  ஜெயிச்சுடுவோம்னு தலையை ஆட்டிட்டு இப்பவந்து கம்முன்னு உட்கார்ந்தா நான் என்ன செய்ய முடியும். நீங்க ஜெயிக்கலைன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது’ என்று திட்டி அனுப்பியிருக்கிறார்.

இந்தத் திட்டுக்களை தானும் கேட்டுக்கொண்ட சுதீஷ், எதுவும் பேசாமல் கிளம்பி போய்விட்டாராம். மற்ற மூவரும் ஒன்றாகப் பேசியிருக்கிறார்கள். ‘வாங்க வேண்டியதை, அவங்க மட்டும் வாங்கிக்கிறாங்க... குடுக்க வேண்டியதை மட்டும் நாம கொடுக்கிறதுன்னா, எங்கப்பா போறது?’ என்று டென்ஷனாகி கிளம்பிப் போயிருக்கின்றனர்.