மிரட்டிய சசிகலா! கொடுத்த பணத்தை நிர்வாகிகளிடம் திரும்ப கேட்பாரா தினகரன்?

தோல்வியைக் கண்டு துவள வேண்டாம், எப்போதும் போல் உற்சாகமாக வேலையைப் பாருங்கள் என்று சின்னம்மா சொல்லிவிட்டார், அதனால் கட்சிக்காரர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பெங்களூரு சிறைச்சாலைக்குப் போய்வந்த தினகரன் பேட்டி கொடுத்தார்.


உண்மையில் உள்ளே என்னதான் நடந்தது என்று தினகரனுக்கு நெருக்கமான நண்பரிடம் விசாரித்தோம். உள்ளே அணுகுண்டு வெடித்திருக்கிறது என்கிறார். ‘‘எப்போதும் முதலில் விவேக்கிடம் பேசிவிட்டு அதன்பிறகு தினகரனிடம் பேசுவது சசிகலாவின் வழக்கம். இந்த முறை முதலில் தினகரனிடம் பேசினார். தினகரன் வழக்கம்போல், நமது வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. ஆனால், நமது வாக்குகள் எல்லாமே வெவ்வேறு கட்சிக்குப் போகும் படி மெஷினில் செட்டப் செய்துவிட்டார்கள். நான் இதுகுறித்து புகார் கொடுக்கப் போகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் கேட்டுக்கொண்ட சசிகலா, அப்படின்னா தி.மு.க. ஜெயிச்சதுக்கு நாமதான் காரணமா? நம்ம ஓட்டெல்லாம் அங்கதான் விழுந்திருக்கா என்று கேட்டிருக்கிறார். தர்மசங்கடத்தில் நெளிந்திருக்கிறார் தினகரன்.

நாம செலவழிச்ச பணத்துக்கு 10% ஓட்டு கூட வரவில்லை என்று கவலைப்பட்டிருக்கிறார். உடனே தினகரன், பாதிப் பேருக்கும் மேல பணத்தை அமுக்கிட்டாங்க என்று சொல்லியிருக்கிறார். எல்லாமே நீ போட்ட ஆளுங்கதான, அப்படிப்பட்ட ஆளுங்களுக்குக் கொடுத்தது யார் தப்பு, ஒழுங்க காசை திருப்பி வாங்குற வழியைப் பாரு, இல்லைன்னா சரியா இருக்காது’’ என்று கறாராக மிரட்டி அனுப்பிவிட்டார். அதன்பிறகு விவேக்கை அழைத்து, நடந்த விவகாரம் குறித்து முழுமையாக கேட்டு தெரிந்திருக்கிறார்.

எப்படியோ பணமும் மரியாதையும் போச்சு என்று டென்ஷனாகித்தான் தினகரனை திருப்பியனுப்பியிருக்கிறார்’’ என்று சொன்னார்கள். அப்படியென்றால் பணத்தை திருப்பி வாங்கிவிடுவாரா என்று கேட்டோம். ஏனுங்க, அவர் கொடுத்தாத்தான திருப்பி வாங்க முடியும். பாதிக்கும் மேலே அவரே அமுக்கிட்டாரே, பின்னே யாருகிட்டே போய் கேட்கிறது என்கிறார்.
அடப்பாவமே...