சசிகலா - தினகரன் மோதல் முற்றுகிறது! இடையில் சிக்கிய முக்கியப் பெண் புள்ளி

கடந்த வாரம் சசிகலாவை விஜயசாந்தி சிறையில் சென்று சந்தித்துவந்தார். அதையடுத்து சசி குடும்பத்தைச் சேர்ந்த முக்கியப் பெண் புள்ளி ஒருவர் சசியை சந்தித்தபோது, தினகரனுக்கு எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த வாரம் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்னாள் திரைப்பட நடிகையும் காங்கிரஸ் புள்ளியுமான நடிகை விஜயசாந்தி சந்தித்துப் பேசினார். அப்போது  பா.ஜ. கட்சியை எதிர்ப்பதில் இதே பிடிவாதத்துடன் இருக்கவேண்டும் என்றும் அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்ததும் விடுதலைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சசிகலாவின் உறவுக்காரப் பெண் ஒருவர் அவரை சந்திக்க வந்தார். அவரிடம்தான் தினகரன் மீதான தன்னுடைய கோபத்தையும் வருத்தத்தையும் காட்டியிருக்கிறார் சசிகலா.

இப்போது தினகரன் தமிழகம் முழுவதும் எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் சசிகலா. ஏனென்றால் இளவரசி குடும்பம், திவாகரன் குடும்பம் என சசி குடும்பத்தில் இப்போது யாருமே தினகரனுடன் தொடர்பில் கிடையாது. அவர் யாரையும் மதிப்பதே இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அதனாலே உறவினர்கள் தினகரனைக் கண்டாலே அலறி ஓடுகிறார்கள்.

அதேபோன்று அ.தி.மு.க.வுடன் தினமும் ஏதேனும் ஒரு வகையில் தினகரன் மோதிக்கொண்டு இருப்பதையும் சசி சுட்டிக் காட்டியிருக்கிறார். எடப்பாடி அணி, பன்னீர்செலம் அணிகளில் நமக்குத் தேவையான நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடமும் தினகரன் நல்ல உறவில் இல்லை. யாரையும் சந்திக்காமல் அசட்டை காட்டுவதால், ஆதரவு கொடுக்க யாரும் முன்வரவில்லை.

எதிர்க் கட்சி வரிசையிலும் தி.மு.க.வை கடுமையாக திட்டிக்கொண்டு இருக்கிறார் தினகரன்.  ஒருவேளை அடுத்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டால், நம்மை  என்னவெல்லாம் செய்வார்கள் என்பது தெரியுமா... அவர்களை நான் எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்து வைத்திருந்தேன் என்பது தினகரனுக்குத் தெரியுமா  என்று அந்த முக்கியப் பெண் புள்ளியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சசிகலா. 

அந்தப் பெண்மணியும், ‘நீங்க சொல்லியே கேட்காதவரு, நான் சொல்லியா கேட்கப்போறார் என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார். நான் சொல்வதை தினகரன் செய்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், தினகரன்  என்ன செய்கிறார்  என்பதை மட்டும் கண்காணித்து என்னிடம் சொல்,  அதுபோதும். தினகரன் பற்றிய சரியான தகவல் சசிகலாவுக்குக் கிடைக்கவில்லை என்றும் வருந்தினாராம். 

தினகரனுக்கு சசிகலா கொடுத்திருக்கும் எச்சரிக்கை இதுதானாம். முதலில் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் செலவுக்குப் பணம் கொடுத்து, கட்சியை உன்னுடைய கண்ட்ரோலுக்குக் கொண்டுவர வேண்டும்.  அதேநேரம் இனியும் அ.ம.மு.க. கட்சி வளர்ப்பது பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். அ.தி.மு.க. மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனால் பாரதிய ஜனதா கட்சி இல்லாத அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதற்கு ஏதுவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

நான் சொல்வதை தினகரன் கேட்கவில்லைஎன்றால், அடுத்து  நான் எடுக்கும் அதிரடி முடிவுக்கு வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினாராம். அந்தப் பெண் தினகரனை சந்தித்து தகவல் சொல்லியிருக்கிறார். வழக்கம்போல் அமைதியாக இருந்த தினகரன், அவங்க அப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நீ  கண்டுக்காம போ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். ஆக, தன்னுடைய ரூட்டில் பயணிப்பதுதான் தினகரனின் திட்டம். அ.தி.மு.க.வில் நுழைந்தாலும் தனக்கு மரியாதை இருக்காது என்று நினைக்கிறார்.

ஆக, பொங்கல் முடிந்ததும் தினகரனுக்கு தீபாவளி