பிரபல பெண் பத்திரிகையாளருடன் துபாய் ஸ்டார் ஹோட்டலில் 3 இரவுகள்! அம்பலமாகும் மு.ம அமைச்சரின் லீலைகள்!

புதுடெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளருடன் 3 இரவுகள் சசி தரூர் ஒன்றாக செலவிட்டதாக, தெரியவந்துள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுனந்தா புஷ்கரின் நண்பரும், பத்திரிகையாளருமான நளினி சிங், வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ''சசி தரூர், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹரர் தரார் உடன் துபாயில் ஒரே அறையில் 3 நாளாக தங்கியிருந்தனர்.

இதனை சுனந்தா புஷ்கர் தெரிந்துகொண்டார். இதனை சாகும் முன்பாக, சுனந்தா என்னிடம் கூறிவிட்டு, கதறியழுதார். சசி தரூரும், மெஹரர் தராரும் ரொமான்டிக் மெசேஜ் பகிர்ந்துகொண்டதையும் தெரிந்து, சுனந்தா மிகவும் மன உளைச்சல் அடைந்தார்.

சசி தரூர் தன்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதன்பிறகே, அவர் உயிரிழந்தார்,'' என்று நளினி சிங் குறிப்பிட்டுள்ளார்.