சரவணபவன் சாம்ராஜ்யத்தை சரித்த அண்ணாச்சியின் ஆசை நாயகி ஜீவஜோதி என்ன ஆனார் தெரியுமா?

இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஆயுள் தண்டனை பெறுவதற்கு காரணமான ஜீவஜோதி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


சரவண பவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணி புரிந்தவரின் மகள்தான் ஜீவஜோதி. ஜீவஜோதி மீது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் மிகுந்த விருப்பத்துடன் இருந்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு மனைவிகளுக்கு ராஜகோபால் கணவன். இந்த நிலையில் மூன்றாவதாக தீப ஜோதியை திருமணம் செய்துகொள்ள ராஜகோபால் விரும்பியுள்ளார்.

இந்த சமயத்தில் தான் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபால் கடத்திச் சென்று தன்னுடைய ஆட்களை வைத்து கொலை செய்து கொடைக்கானல் மலையில் வீசி விட்டார் என்று கூறி கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.

என்னுடைய கணவரை கடத்திச் சென்று கொலை செய்தது ராஜகோபால்தான் என்று ஜீவஜோதி கொடுத்த வாக்குமூலத்தில் தான் தற்போது மிகப்பெரிய பணக்காரரான ராஜகோபால் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜகோபாலின் இந்த நிலைக்கு காரணமான ஜீவஜோதி தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தபோது அவர்கள் இருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது.

கணவர் கொலையான பிறகு குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்த ஜீவஜோதி தன்னுடைய நீண்ட நாள் நண்பரான தண்டபாணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இருவரும் சேர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு டெய்லரிங் ஷாப் வைத்து நடத்தி வந்தனர். 

அந்த சமயத்தில் ஜீவஜோதி க்கு பிறந்த குழந்தை உண்பதே மாதத்தில் காலம் ஆகிவிட்டது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஜீவஜோதி தன்னுடைய காலமான குழந்தை பரணி பெயரில் மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு ஓட்டல் தொடங்கினார். பின்னர் ஜீவஜோதி தண்டாயுதபாணி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டலை மூடிவிட்டு தற்போது ar ரஹ்மானின் நகரில் டெய்லரிங் ஷாப் மட்டும் வைத்து ஜீவஜோதி நடத்தி வருகிறார். அவருடைய கணவர் தண்டாயுதபாணியும் வெளிநாடுகளுக்கு அப்பளம் ஊறுகாய் போன்றவற்றை ஏற்றுமதி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். 

தற்போதைய சூழலில் ராஜகோபால் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று தன்னுடைய தாய் தவமணி மூலமாக செய்தியாளர்களுக்கு ஜீவஜோதி தகவல் அனுப்பி வருகிறார். கருடன் ஆலோசித்துவிட்டு தான் பேசியிருப்பதாகவும் ஜீவஜோதி கூறியுள்ளார்.

தன்னுடைய மகள் தற்போது தான் அனைத்து பெண்களையும் போல சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஜீவஜோதியின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.