விஷால் வெளியிட்ட வீடியோ! 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி! என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்?

சங்க கட்டிடத்திற்குப் பிறகுதான் திருமணம், என்னுடைய திருமணம் நிச்சயமாக ஒரு சினிமா குடும்பத்தில் இருந்துதான் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார் விஷால்.


அப்போது எல்லோருடைய பார்வையும் விஷாலுடன் நட்பு பாராட்டிவந்த வரலட்சுமி சரத்குமார் மீதுதான் இருந்தது. அப்போது உலவிய கிசுகிசுக்கு இருவருமே பதில் சொல்லவும் இல்லை. சரத்குமாரை எதிர்த்து விஷால் நின்றபோதும் விஷாலுக்கும் ஆதரவாக இருந்தார் வரலட்சுமி. ஒருவழியாக ஜெயித்து முடித்ததும் இவர்களுடைய நட்பும் உடைந்துபோனது.

சரத்குமார், ராதாரவியை கோர்ட்டுக்கு இழுக்கும் வேலையை செய்யத் தொடங்கினார் விஷால். சங்கத்தின் கடனை அடைப்பேன், கட்டிடம் கட்டுவேன், ஓய்வூதியம் வழங்குவேன் என்று சொன்னது உருப்படியாக எதுவும் நிறைவேறவில்லை. அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இப்போது பாக்யராஜ் தலைமையில் ஐசரிகணேஷ் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க் விஷாலை கவிழ்க்கத் தயாராகிவிட்டது.

கடந்த தேர்தலில் தனக்கு இருந்த க்ளீன் இமேஜ் தற்போது இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட விஷால், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ராதாரவி, சரத்குமார் போன்றவர்கள் ஊழல் செய்தார்கள், அவர்களிடம் இருந்து சங்கம் மீட்கப்பட்டதை சாதனையாக குறிப்பிட்டிருந்தார் விஷால்.

இதைக் கண்டுதான் கொதித்து எழுந்துவிட்டார் வரலட்சுமி சரத்குமார். உடனே ஒரு கண்டன அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கயில், ‘உன் மீது நான் வைத்திருந்த கடைசி மரியாதையையும் கூட நீ கெடுத்துக்கொண்டாய். முதிர்ச்சி என்றால் என்னவென்றே உனக்குத் தெரியவில்லை.

அதனால் என்னுடைய ஓட்டையும் நீ இழந்து விட்டாய். நீ இந்த அளவுக்குக் கேவலமாக இருப்பாய் என நினைக்கவில்லை. நீயும் திரைக்குப்பின்னே ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்துவிட்டாய்’’ என்று நாயடி பேயடி கொடுத்திருக்கிறார். சரத்குமார் பற்றி விஷால் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவிக்கும் நிலையில், ஏன் இப்போது மட்டும் வரலட்சுமி கோபித்துக்கொண்டது ஏன் என்று அவரது நெருங்கிய வட்டத்தில் விசாரித்தால், ‘வரலட்சுமி இரண்டாவது முறையாக ஏமாந்து போனார், அந்த ஏமாற்றம்தான் அறிக்கை’ என்கிறார்கள். இன்னும் எத்தனை தடவைம்மா ஏமாறுவே..?