நான் அந்த மாதிரி கேர்ள் தான்! பிரபல நடிகரின் மகள் அணிந்த டீ சர்ட்டால் சர்ச்சை!

ஹிந்தி திரை உலகில் சமீபத்தில் நடிக்க ஆரம்பித்து ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் சாரா அலி கான்.


இவர் பிரபல நடிகர் சாஹிப் அலி கானின் மகள் ஆவார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்த "கேதார்நாத் " படத்தின் மூலம் ஹிந்தி திரைப்பட துறையில் அறிமுகம் ஆனார்.  தற்போது சாரா அலி கான், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான ஜிம் செஷன்யை முடித்து விட்டு வெளியே வரும் போது அவரது ரசிகர்கள் கண்ணில் சிக்கினார்.

அவர் கருப்பு நிற மேலாடையும், மிகவும் இறுக்கமான ஷார்ட்ஸ் ஒன்றையும் அணிந்து வந்தார். அவர் அணிந்து வந்த டீ-ஷர்ட் -இல் "பிளேட் கேர்ள் " என்ற வார்த்தை எழுதபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சாரா தனது உடல் எடையை குறைப்பதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஜிம் விட்டு வெளியே வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.  இவர் எப்போதும் ஜிம் விட்டு வெளியே வரும் போது தனது தோழி ஜான்வி கபூர் உடன் வருவது தான் வழக்கம்.

இவர் மும்பையில் பிறந்திருந்தாலும், இவரது கல்லூரி படிப்பை நியூயார்க்கில் மேற்கொண்டார்.  இவர் அங்கிருக்கும் போதே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் "நான் என் உடல் எடையை குறைப்பதற்காக எனது உணவு பழகத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டேன், பிஸ்ஸாவிலிருந்து சாலட்டிற்கு மாற்றிக்கொண்டேன்" என்றார்.