ஆட்டம்னா இது தான் ஆட்டம்! வைரலாகும் சப்னா சவுத்ரி வீடியோ!

டெல்லி: தாலர் மெஹந்தி உடன் சேர்ந்து சப்னா சவுத்ரி வெளியிட்டுள்ள புதிய ஆல்பத்திற்கு சமூக ஊடகங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


ஹரியானாவை சேர்ந்த சப்னா சவுத்ரி கவர்ச்சியான சினிமா பாடல்கள் மற்றும் ஆல்பங்களை வெளியிடுவது வழக்கமாகும்.

இதன்படி, புதியதாக, #BawliTared என்ற பெயரில் சப்னா சவுத்ரி வெளியிட்டுள்ள ஆல்பம், யூ டியுப்பில் மட்டும் இதுவரை 20 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

இதனை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார். இருந்தாலும், இந்த ஆதரவு போதாது என்றும், மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடலை, பஞ்சாப் பாடகர் தாலர் மெஹந்தி உடன் சேர்ந்து அவர் பாடியுள்ளார். இந்த பாடல்தான் சமூக ஊடகங்களில் அதிக வரவேற்பை பெற்று தற்போது டிரெண்டிங்காக உள்ளது.