சண்டேஸ்வரர் அருகில் சென்று ஏன் கைகளை தட்டக்கூடாது தெரியுமா?

சிவாலயங்களில் சண்டேஸ்வரர் அருகில் சென்று சிலர் கைகளை தட்டுவார்கள். சிலர் நூலைக் கிள்ளி எடுத்துப் போடுவார்கள். மற்றும் சிலர் சுடக்கு போடுவார்கள். இவ்வாறு செய்வதெல்லாம் மிகத்தவறு.


சண்டேஸ்வரர் சதா சர்வகாலமும் சிவ சிந்தனையோடு தவ நிலையில் இருப்பதால் அவருக்கு அவரது தவத்திற்குப் பங்கம் ஏற்படாமல் தொழ வேண்டும். எவ்வாறெனில் இரண்டு கைகளையும் துடைத்து காண்பித்துநான் கோயிலிலிருந்து ஒன்றுமே எடுத்து செல்லவில்லை’ என்ற பாவனை செய்து பிறகு கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு இரு கைகளையும் துடைத்து பாவனை செய்வது நாளாவட்டத்தில் கைகளை தட்டி, சுடக்கு போடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. சிவன் சொத்து குல நாசம்’ என்பர் சிவன் கோவிலில் இருந்து எந்த பொருளையும் வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. நந்தவன புஷ்பங்களையும் கூடத்தான்.