நடுக்கடலில் மூழ்கிய படகு! உயிருக்கு போராடிய 20 பேர்! அனைவரையும் காப்பாற்றிய சாம்சங் போன்! அதிசய நிகழ்வு!

வாஷிங்டன்: கடலில் மூழ்கிய 20 பேரை மீட்க சாம்சங் ஸ்மார்ட்ஃபோன் உதவி செய்துள்ளது. வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்ஃபோன்கள்தான் தற்போது டிரெண்டிங்காக உள்ளது.


இதன்படி, சாம்சங் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டில், ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் கொண்ட 4 ஜிபி ரேம் வசதி உள்ள கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்தது. இது உலகம் முழுக்க பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மொபைல், சமீபத்தில் ஒரு நல்ல விசயத்தைச் செய்துள்ளது. ஆம். நடுக்கடலில் மூழ்கிய 20 பேரை காப்பாற்ற இது உதவி புரிந்துள்ளது. 

கடந்த ஜூலை 8ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் மலபாஸ்குவா தீவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால், பயணிகள் அனைவரும் கடும் பீதி அடைந்தனர். இதில், அனைவரது ஃபோன்களும் தண்ணீரில் மூழ்கி, ஆஃப் ஆகிவிட்டன. ஆனால், ஒரே ஒருவரின் ஸ்மார்ட்ஃபோன் மட்டும் தண்ணீரில் நனையவில்லை.

ஆம். அவர் வைத்திருந்தது கேலக்ஸி எஸ் 8 ரக ஸ்மார்ட்ஃபோன். கனடாவைச் சேர்ந்த அவரது பெயர் ஜிம் எம்டி. தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் சூழலில் அவரது ஸ்மார்ட்ஃபோன் இயல்பாக இயங்கியதால் உடனடியாக, அவர், எமர்ஜென்சி அழைப்பு மூலமாக, பிலிப்பைன்ஸ் போலீசாரை தொடர்புகொண்டு, தங்களை காப்பாற்றும்படி கோரியுள்ளார்.

இதை வைத்து, அவரது மொபைலின் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் கண்டறிந்த பிலிப்பைன்ஸ் போலீசார், சிறிது நேரத்தில் மீட்புப் படையை அனுப்பி அந்த 20 பேரையும் காப்பாற்றியுள்ளது. 

இதுபற்றி பின்னர் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியாகப் பேசிய ஜிம் எம்டி, சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மொபைலை வடிவமைத்த பொறியாளர்களுக்கும், அந்த நிறுவனத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதற்கு, சாம்சங் நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் பிரிவு தலைவர் ஜேம்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ''இதுபோன்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள்தான், மக்களுக்காக புதிய பொருட்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற உத்வேகத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆபத்து காலங்களில் மக்களுக்கு உதவக்கூடிய பொருட்களை வரும் காலத்தில் நிறைய அறிமுகப்படுத்துவோம்,'' என்றார்.