சாம்சங் கேலக்ஸி நோட் 10! அட்டகாசமான விலை! அசர வைக்கும் ஸ்பெசிபிகேசன்!

நியூயார்க்: இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொடுதிரை வசதியுடன் கூடியதாக, கேலக்ஸி நோட் 10, கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


நியூயார்க்கில் இதற்கென நடைபெற்ற நிகழ்ச்சியில், இவ்விரு ஸ்மார்ட்ஃபோன்களையும் சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஃபோன்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்ஃபோன், 6.3 இன்ச் தொடுதிரை வசதியுடன், எஸ்-பென் வசதியை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.8 இன்ச் தொடுதிரை வசதியுடன் உள்ளது. 

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஆகிய இரண்டுமே, ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டிருந்தாலும், அவற்றின் சிறப்பம்சங்கள் வேறுபட்டுள்ளன. இவ்விரு ஃபோன்களும் டைனமிக் AMOLED பேனல் கொண்டதாக, ஹெச்டிஆர்10 பிளஸ்

வசதியை கொண்டுள்ளது. இதேபோல, கேலக்ஸி நோட் 10 2280x1080 பிக்சல்ஸ் 401பிபிஐ டிஸ்பிளே கொண்டுள்ளது. நோட் 10 பிளஸ் 3040x1440 பிக்சல்ஸ் ரெசொல்யூசன் டிஸ்பிளே கொண்டுள்ளது. 

கேலக்ஸி நோட் 10, 8ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்புத் திறன் கொண்டதாகும். சர்வதேச சந்தைகளில் எல்டிஈ தொழில்நுட்ப வசதியிலும்,  சாம்சங்கின் சொந்த நாடான தென்கொரியாவில் 5ஜி வசதியிலும் கிடைக்கிறது. இதில், மெமரி கார்டு பயன்படுத்த முடியாது. 

அதேசமயம், கேலக்ஸி நோட் 10 பிளஸ், 1 டிபி வரையான மெமரி கார்டு பயன்படுத்தக்கூடியதாகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மற்றும்  512 ஜிபி இன்-பில்ட் சேமிப்புத் திறன் கொண்டதாகும். சர்வதேச சந்தையில் எல்டிஈ சேவையிலும்,  தென்கொரியாவில் 5ஜி சேவையிலும் இயங்கக்கூடியதாகும். 

சாம்சங் கேலக்ஸி நோட் 10 3,500 mAh பேட்டரியுடன், ஆரா குளோவ், ஆரா ஒயிட், ஆரா பிளாக், சிவப்பு, பிங்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை இந்திய ரூபாயில் 67,400 ஆகும். இதேபோல, கேலக்ஸி நோட் 10 பிளஸ், 4,300mAh பேட்டரியுடன் ஆரா குளோவ், ஆரா ஒயிட், ஆரா பிளாக் மற்றும் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் தொடக்கவிலை இந்திய மதிப்பில் ரூ.78,100 ஆகும். 

இவ்விரு ஃபோன்களும் அமெரிக்க வாடிக்கையாளர்கள் மட்டும் தற்சமயம் முன்பதிவு செய்யலாம். மற்ற நாடுகளுக்கு, அதற்கு தகுந்தாற்போல அறிவிப்பு வெளியாகும் என சாம்சங் கூறியுள்ளது. இவ்வளவு விவரம் இருக்கு, கேமிரா சிறப்பம்சம் பற்றி சொல்லவே இல்லை எனக் கேட்கிறீர்களா, எதோ டெலிஃபோட்டோ லென்ஸ் பொருத்திய அதிநவீன கேமிரா வசதி எனச் சொல்கிறார்கள். அதை நீங்களே ஆன்லைனில் சென்று விவரமாக படித்துப் பாருங்கள்...