போன வாரம் கவர்ச்சி போட்டோ சூட்! இந்த வாரம் பிரசவம்! நடிகைக்கு என்ன குழந்தை தெரியுமா?

நடிகை சமீரா ரெட்டிக்கு வெள்ளி கிழமை காலை அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.


பீம்ஸ் மல்டி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் விழியன் இரவு அட்மிட் செய்யப்பட்ட சமீரா ரெட்டிக்கு, வெள்ளி கிழமை காலையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் இன்று காலை எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் என் நன்றி என்றும் அவர் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை சமீரா ரெட்டி தண்ணீர்க்கு அடியில் ரிஸ்க் எடுத்து போட்டோஷூட் நடத்தி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமீரா ரெட்டி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 2015 ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.