உடலின் அந்த இடத்தில் அவர் பெயர்! சமந்தா வெளியிட்ட டாட்டூ ரகசியம்!

நடிகை சமந்தா இவ்வளவு நாள் மறைத்து வைத்து இருந்த ஒரு முக்கியமான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டு ரசிகர்ளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் .


நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தபிறகும்  திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சமீபத்தில் வெளியான ஓ பேபி  திரைப்படமானது நடிகை சமந்தாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா ஜிம்மிற்கு சென்று தனது உடலை மிகவும் ஸ்லிம்மாக மாற்றியுள்ளார்.

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து கொண்டே இருப்பார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த ஒரு முக்கியமான விஷயத்தை வெளியிட்டுள்ளார் . சமந்தா தனது உடலில் தன் கணவரின் பெயரை குறிக்கும் வகையில் " நாகா" என்ற பெயர் பதிக்கப்பட்ட டாட்டூ தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

மேலும் அதில் நான் மறைத்து வைத்து  இருந்த ஒரே ஒரு விஷயம் இதுதான். தற்போது அதையும் வெளியிட்டு விட்டேன் என்று டேக் செய்துள்ளார். நடிகை சமந்தா  வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது