காதலிக்காக 500 அடி உயர டவரில் ஏறிய இளைஞன்! பிறகு என்ன செய்தார் தெரியுமா?

சேலத்தில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை செய்ய போவதாக அலப்பறை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சேலம் வாழப்பாடியில் நேற்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் செல்போன் டவரின் மீது விறு விறு வென ஏறுவதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார் அந்த நபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதில் அவர் காமக்காபாளையத்தை சேர்ந்த வடிவேல் வயது 29 எனவும் ஈரோடு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார் எனவும், மேலும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் வடிவேலு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக கேரள மாநிலம் செல்ல, தகவல் அறிந்த உறவினர் தாங்களே சேர்த்துவைப்பதாக பேச்சு வார்த்தை நடத்தி திரும்பி அளித்துள்ளனர்.

இதனை நம்பி வந்த வடிவேலுவை ஏமாற்றி விட்டு பெண் வீட்டார் , வேறொரு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர், இதனால் அதிருப்தி அடைந்த வடிவேலு காவல் நிலையம் சென்று பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறினார். நீண்ட நேர சமாதானத்திற்க்கு பின்னர் வடிவேலுவை அவரது காதலியுடன் சேர்த்து வைப்பதாக போலீசார் நம்பிக்கை அளித்தை அடுத்து அவர் பத்திரமாக மீட்கபட்டார்.