நள்ளிரவில் வீடு புகுந்து இளம் பெண்ணுடன் தகாத செயல்! கட்டி வைத்து உதைத்த உறவினர்கள்! பிறகு நடந்த ட்விஸ்ட்!

சேலம் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் முறைத்தவறி நடக்க முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடிக்கொடுத்த சம்பவம் பரவலாகி வருகிறது.


ஆத்தூர் அருகே சித்தேரியில் கூலி தொழிலாளியின் மனைவி இரவில் தனியாக இருந்துள்ளார். வெயிலின் தாக்கத்தால் வீட்டுக்கதவை திறந்து வைத்தபடி தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், சம்பவத்தன்று இரவு அந்த வீட்டில் நுழைந்து, தனியாக இருந்த அந்த பெண்ணிடம் பாலியல்  அத்துமீறல் செய்துள்ளார் ,

இதில் பயந்து அலறிய பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உடனடியாக வந்து பெண்ணை மீட்டதுடன், அத்துமீறிய வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து பதம் பார்த்தனர். மேலும் சம்பவம் குறித்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறியது உறவுக்கார இளைஞன் என தெரிய வந்தது. இதை அடுத்து அந்த இளைஞனை கண்டித்து ஊர்மக்கள் அனுப்பி வைத்தனர்.