சேலத்தில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூரன்! மகளிர் நீதிமன்றம் வழங்கிய தரமான தண்டனை!

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தைக்கு, விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.


சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபர் தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சகுந்தலாவுக்கும் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனை பிரிந்து சகுந்தலா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 இதனால் இரண்டு மகளையும் சரவணன் கவனித்து வந்தார். இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கும் தனது மகள்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் சரவணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

சரவணனின் அத்துமீறலால் தந்தை மூலமாக மகள்களில் ஒருவர் கர்ப்பமானார். இந்த நிலையில்  இரண்டு பெண்களில் ஒரு பெண் கர்ப்பம் ஆனாள். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது பெற்ற தந்தையே தன்னிடம் அத்துமீறிய அவலத்தை கூறி அந்த பெண் அழுதுள்ளார். இதனை  அடுத்து சரவணன் குறித்தும் , அவர் பெற்ற மகள்களை பாலியல் கொடுமை செய்து வருவது குறித்தும்  புகார் அளிக்க முடிவு செய்தனர்.

சேலத்தில் உள்ள லைப் லைன் டிரஸ்ட்  என்ற தனியார் நிறுவனத்தில் பொது மக்கள் புகார் செய்தனர்.  இதனையடுத்து லைப் லைன் டிரஸ்ட் நிர்வாகிகள் மகளிர் காவல் நிலையத்தில் சரவணன் குறித்து புகார் அளித்தனர்.

 பின்னர் போலீசார் சரவணனிடம் விசாரித்தனர். பிறகு அவரது இரண்டு மகள்களையும் அழைத்து விசாரித்தனர் . இதில் இரண்டு பெண்களில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சேலம் டவுன் நகர மகளிர் போலீசார் சரவணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் இரண்டு பெண்களும் சைல்டு லைன் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டு அங்கேயே தங்கி வசித்து வருகின்றனர். 

 கைதான சரவணன் கடந்த மூன்று வருடங்களாக சேலம் மத்திய சிறையில் உள்ளான். அவனுக்கு  கடந்த மூன்று வருடங்களாக ஜாமீன்  தரப்படவில்லை.

இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி விஜயகுமாரி பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் பெற்ற மகள்களை பலாத்காரம் செய்த சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

மேலும் சரவணன் ரூ10 ஆயிரம் ஆயிரம் அபராதமும் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவும் நீதிபதி ஆணையிட்டார்.