வீரமணியும் மணியம்மையும் எங்கே போனார்கள்..? சேலம் ஊர்வலத்தில் கசமுசா

சேலத்தில் 1971ம் ஆண்டு பெரியார் மாநாடு நடத்திய நேரத்தில், அந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் வீரமணியும் மணியம்மையும் சென்னைக்கு போய்விட்டார்கள் என்று ஒரு தகவல் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர், திராவிடர் கழக பகுத்தறிவு ஆசிரியர் அணியில் இருந்தவர் அந்தப் பத்திரிகைக்கு அன்றைய தினத்தில் நடந்தது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்வது இதுதான்.  

‘‘சிவன், திருமால் இணைந்து ஐயப்பனைப் பெற்றதை, கேலி செய்வது மாதிரி ஆம்பளையும், ஆம்பளை இணைந்தால் குழந்தை பிறக்குமா? என்பது மாதிரியான படங்கள் மாட்டு வண்டியில் இடம் பெற்று இருந்தன. அந்த ஊர்வலம் சேலம் தீயணைப்பு நிலையம் வந்தபோது, ஜனசங்கத்தினர் ராமரை அவமதிக்கலமா? என்று செருப்பைத் தூக்கி எறிந்தனர்.

அந்த செருப்பை எடுத்து ராமர், மறைந்து நின்று வாலியை தாக்கும் படத்திற்கு நேராக செருப்பால் அடிக்க நினைத்து தூக்கி போட, அது மாட்டுவண்டியில் ராமர் படத்திற்கு முன் விழுந்தது. அதை எடுத்து ராமர், சீதை படத்தை செருப்பால் முதலில் அடித்தவர் திருச்சி செல்வேந்திரன். அதற்கு பிறகு கூட்டத்தில் இருந்த பலரும் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதை எல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரே கடைசியில், ‘‘அன்று ஏனோ பெரியார் மிகவும் கோபமாக இருந்தார். ஏனென்றால், பெரியாருக்குத் தெரியாமல் வீரமணியும், மணியம்மையும் சென்னைகுப் போய்விட்டார்கள். ஏன் அவர்கள் சென்னைக்குப் போனார்கள்? இரண்டு பேரும் சென்னைக்குச் சென்றது ஏன் என்றுதான் பெரியார் மிகவும் கோபமாக இருந்தார் என்று சொல்கிறார் கந்தசாமி.

இந்தக் கேள்விக்கு வீரமணி பதில் சொல்லலாமே? அன்று மணியம்மையுடன் சென்னைக்கு ஏன் சென்றீர்கள் வீரமணி?