சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அங்கு படித்துவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடற் கலவி ஆசிரியரின் லீலைகள்! காதல் என மாணவியை துரத்தி துரத்தி செக்ஸ் சீண்டல்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!
சேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் பாலச்சந்திரன் 23, இவர் அப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும்போது அந்த மாணவியை தனியே அழைத்து பாலியல் சீண்டல்கள் செய்து வந்துள்ளார்.
12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவி தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு பாலச்சந்திரன் செல்போன் மூலம் தொல்லை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த மாணவியை தேடி பாலச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார். அப்போது மாணவியை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் இதனை உடனே தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த பெற்றோர்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் ஒன்றை அளித்தனர்.
புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்திரனை கைது செய்த போலீசார் அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.