கொடுவாள்! வீச்சரிவாளுடன் திமிறிய ரவுடி! என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய சேலம் போலீஸ்!

கொடுவாள், வீச்சரிவாளுடன் போலீசாரிடம் திமிறிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.


சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவன் கதிர் வேல். இவன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உள்ளிட்டு 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளிலும் கதிர்வேர் பெயர் உள்ளது. இந்த நிலையில் காரிப்பட்டியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரியான கணேஷ் என்பவர் படூகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் கதிர்வேல் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

இதனை அடுத்து ரவுடி கதிர்வேல் தலைமறைவானான். அவனை பிடிக்க உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனை அறிந்து அவன் வெளியே வராமல் பதுங்கியிருந்தான்.இந்நிலையில் கதிர்வேல் மற்றும் அவனது கூட்டாளிகள் காரிப்பாட்டியில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களை பிடிக்க காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, தலைமையில் போலீசார் சென்றனர். 

அப்போது கதிர்வேல் மற்றும் கூட்டாளிகள் தங்களிடம் இருந்த கொடுவாள் மற்றும் வீச்சரிவாளால் போலீசாரை தாக்கியுள்ளனர். மேலும் கைது செய்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இன்ஸ்பெக்டர் சுப்ரமணி துப்பாக்கியால் சுட்டதையடுத்து கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.