சேலத்தை கலக்கும் கவிதா அக்கா குழம்பு கடை! பேச்சுலர்கள் வாயில் எச்சில் ஊற வைக்கும் ருசி!

சேலத்தில் வெறும் குழம்பு கடையாக தொடங்கி நம்பர் ஒன் கேட்டரிங் குழுவாக வளர்ந்திருக்கும் கவிதா அக்காவின் உழைப்பு பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.


தற்போதைய பொருளாதார சூழலில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், பிறர் வீட்டு வேலைகள் உள்ளிட்ட அனைத்துமே அவதிக்கிடையே தான் நடைபெறுகின்றன. இந்நிலையில் வீட்டையும் சிறப்பாக கவனித்துக்கொண்டு வருமானத்துக்கான வழியையும் தேடிக்கொள்ள கவிதா அக்காவுக்கு ஒரு சிறப்பான தொழில் கை வரப் பெற்றிருக்கிறது.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிதா அக்காவுக்கு தெரிந்த ஒரே விஷயம் சமையல். அதனையே வருமானத்துக்கான ஒரு வாய்ப்பாக்க திட்டமிட்ட அவர் தனது தோழிகளுடன் சேர்ந்து குழம்பு கடை ஒன்றை தொடங்கினார். இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக இவரது கடைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சேலத்தில் ஒரு முக்கிய கேட்டரிங் நிறுவனமாக வளர்ந்திருப்பதாகக் கூறுகிறார் கவிதா.

தொடக்கத்தில் தனக்குத் தெரிந்ததை வைத்து குழம்பு வகைகளை தயாரித்த கவிதா அக்கா தற்போது ரசம் குழம்பு சாம்பார் பொரியல் சைடிஷ் வடை எனப் பல்வேறு வகையிலும் கலக்கி வருகிறார் எனினும் இங்கு வைக்கப்படும் சுண்டல் குழம்பு சேலம் ஸ்பெஷல் மொச்சைக்கொட்டை குழம்பு ஆகியவற்றுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது இங்கு அசைவ குழம்புகளும் உண்டு அவற்றில் இங்கு தயாரிக்கப்படும் சிக்கன் கிரேவி க்கு வரவேற்பு அதிகம்

பொதுவாக பேச்சலர்கள் தான் இதுபோன்ற உணவுகளைத் தேடி வருவார்கள் என்ற நிலையில் கவிதாவின் கடைக்கு பெண்களும் அதிகளவில் ரசிகர்களாக உள்ளனர். கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் இன்றைய காலகட்டத்தில் சோற்றை மட்டும் வடித்துவிட்டு 20 ரூபாய்க்கு குழம்பை வாங்கி விட்டால் அன்றைய பொழுது முடிந்து விடுகிறது.

தொடக்கத்தில் குழம்பு கடையாக மட்டும் இருந்த நிலை மாறி தற்போது கல்யாணம், சீமந்தம், புதுமனை புகுவிழா என பல்வேறு விழாக்களுக்கும் இவர்கள் கேட்டரிங் செய்து கொடுக்கிறார்கள் காலை ஏழரை மணிக்கு தொடங்கி இட்லி, தோசை, பொங்கல், பூரி என்றும் மாலையில் பணியாரம், கிச்சடி, வடை உள்ளிட்ட பல்வேறு பலகாரங்களையும் செய்து வருகின்றனர். சில்லி சோயா பீன்ஸ் சுக்கா, சேனைக்கிழங்கு சுக்கா உள்ளிட்டவையும் இங்கு பிரபலம்

இந்நிலையில் யூடியூபிலும் கவிதா அக்கா பிரபலமான நிலையில் சென்னை பேச்சுலர்கள் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் சென்னையில் ஒரு கிளையைத்தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிக பேச்சுலர்கள் உள்ள நிலையில் இது ஒரு மிகச் சிறப்பான தொழில் வாய்ப்பாக உள்ளது.

உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருள் இங்கு வேலை செய்யும் பெண்களுக்கான ஊதியம் உள்ளிட்டவை காரணமாக சுமாரான வருமானம் தான் வருகிறது என்றாலும் சொந்த தொழில் செய்து பல பெண்களுக்கும் வேலை கொடுக்க முடிகிறது என்பது தனக்கு திருப்தி அளிப்பதாக கவிதா அக்கா கூறுகிறார்