தலைவிரி கோலம்..! ஆக்ரோசம்..! பேய் பிடித்ததாக இளம் பெண்ணை திருநங்கை செய்த பகீர் செயல்! காரணம் இது தானாம்!

சேலம் மாவட்டத்தில் திருநங்கை ஒருவர் இளம்பெண்ணை பிரம்பால் அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்நிலையில் அந்த பெண் தனக்கு பேய் பிடிக்கவில்லை எனவும் பெற்றோரை ஏமாற்றுவதற்காக தான் அவ்வாறு செய்ததாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை காளியம்மன் திருக்கோவில் பல ஆண்டுகளாக அருள்வாக்கு கூறி வருபவர் மதுர இவர் ஒரு திருநங்கை இவரது இயற்பெயர் ஐயப்பன், பின்னர் இவரது பெயரை மதுர என மாற்றிக்கொண்டு மதுரகாளியம்மன் கோவிலில் அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த கோவிலைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் குடும்ப பிரச்சனை தொழில் நஷ்டம் மற்றும் பில்லி சூனியம் போன்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இவரிடம் வந்து அருள்வாக்கு கேட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் தான் அருள்வாக்கு கூறுவதை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றி வந்துள்ளார் மதுர.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பெற்றோர்கள் அவர்களது மகளுக்கு பேய் பிடித்ததாக கூறி மதுராவிடம் அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை அமரச்செய்து மதுர பிரம்பை எடுத்து அடிக்கச்செல்வது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் இந்த மாதிரியாக முரட்டுத்தனமாக நடந்து கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவ அந்த இளம்பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மதுர தன்னை அடித்து துன்புறுத்தவில்லை எனவும் பெற்றோர்களிடம் நான் பேய் பிடித்ததாக பொய்யாக கூறியதால் தான் தன்னை அடிக்க வந்ததாகவும்.

அவர் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் மதுர கூறியதாவது அந்தப் பெண் கடந்த 20 நாட்களாக எனக்கு பேய் பிடித்தது போல் கண்ணை உருட்டி தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு நாடகம் ஆடுவதாகவும் தான் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் தங்களது பெற்றோர் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை எனவும் வேறு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தனக்கு பேய் பிடித்தது போல் நடித்தால் இந்த திருமணத்தை பெற்றோர் நிறுத்திவிடுவார்கள் என எண்ணி தான் அவ்வாறு நடித்ததாக இளம் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர்களை ஏன் பேய் பிடித்ததாக கூறி ஏமாற்றினாய் இதனால் உனது வாழ்க்கையே வீணாகிவிடும் என அப்பெண்ணை இரண்டு அடி அடுத்ததாக மதுர தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணின் பெற்றோர்களின் அனுமதியுடன் தான் யூடிபில் இந்த வீடியோவை அது விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சமூக ஊடகங்களில் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டு நான் பேய் ஓட்டுவதற்காகத்தான் இளம்பெண்ணை பிரம்பால் அடுத்ததாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ மூலம் நேயர்கள் பலர் தன்னை கொடூரமாக நடந்துகொண்டதாக சித்தரித்துள்ளனர். இது எனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மதுர தெரிவித்துள்ளார்.