ஹெல்மெட்டுடன் திருமண ஊர்வலம்! சேலத்தை அசத்திய கல்யாண ஜோடி! ஏன் தெரியுமா?

சேலத்தில் அதிகரித்து வரும் வாகன விபத்துகளை குறைக்க அரசு சார்பில் தொடர்ந்து தலை கவசம் அணிந்து வாகனம் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


சேலம் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்த நினைத்த இளம் தம்பதியினர், திருமணம் செய்த கையோடு ஹெல்மெட் விழிப்புணர்வு செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் கீர்த்தி ராஜ் மற்றும் தனசிரியா தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருமணம் முடிந்த கையோடு, நெத்திமேட்டிலுள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடு வரையில் இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி சாலையில்  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் புதுமண தம்பதியின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்காலில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் நோக்கம் சிறப்பானது என்று லைக்ஸ் குவிகிறது.