பியூட்டி பார்லருக்கு வந்த பெண்களுக்கு மேனேஜரால் நேர்ந்த விபரீதம்! சேலம் பரபரப்பு!

இளம்பெண்களை மொபைல் ஃபோனில் ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர்தான் இவ்வாறு கைது செய்யப்பட்டவர். சேலம் அழகாபுரத்தில் உள்ள பியூட்டி பார்லர் கடையின் மேலாளராக பணிபுரியும் நல்லதம்பி, இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, பழகி, அவர்களை வீடியோ கால் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி மொபைல்ஃபோனில் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர், இதன்பேரில்,  அந்த இளம்பெண்களை மிரட்டி, பணம் பறித்தும் வந்துள்ளார். 

இதுபோல, பள்ளி மாணவி ஒருவரை கடந்த சில நாட்களாக, தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவியின் தாய், அழகாபுரத்தைச் சேர்ந்த மக்களிடம் புகார் கூறியுள்ளார். இந்நிலையில் உஷாரான பொதுமக்கள், நல்லதம்பியை கவனிக்க தொடங்கியுள்ளனர். அப்போது, ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய நல்லதம்பியை, அழகாபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

அவரை சராமரியாக அடித்து உதைத்த இளைஞர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேசமயம், நல்லதம்பியால் பாதிக்கப்பட்ட பெண்களில், ஒருவர் மட்டுமே போலீசில் புகார் கூறியுள்ளார். சுமார் 30 பெண்கள் வரை அவர் இவ்வாறு ஏமாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களில் சிலரேனும் முன்வந்து புகார் அளித்தால், நல்லதம்பிக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.