பொள்ளாச்சியை மிஞ்சிய பாலியல் கொடூரம்! பெண்களை நாசம் செய்யும் சேலம் கும்பல்!

பொள்ளாச்சியில் நடந்ததை விட அதிகளவு பாலியல் கொடூரங்களை செய்யும் கும்பல் ஒன்று சேலத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.


சமீபத்தில், பொள்ளாச்சி அருகே, 200க்கும் அதிகமான இளம்பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிவந்த கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலம் அருகே, பொள்ளாச்சியில் நடந்தது போலவே, ஒரு கும்பல் இளம்பெண்களை  ஏமாற்றி பாலியல் கொடூரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம், 25 பேர் அடங்கிய அந்த கும்பலை, கொண்டாலம்பட்டி போலீசார் விசாரித்தபோது, 90க்கும் அதிகமான பெண்களை இப்படி பாலியல் கொடுமை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவர்களில், ,5 பேர் தவிர, எஞ்சிய அனைவரையும் போலீசார் பணம் வாங்கிக் கொண்டு, விடுவித்துள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமல், போலீசாரே, குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்படுவது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் இவ்வளவு பெரிய பிரச்சனை ஆன பிறகும் கூட இதே போன்ற நிலைமை மற்ற பெண்களுக்கு ஏற்படுவது அதிர்ச்சியாகவே உள்ளது. அதே சமயம் போலீசாரும் இப்படி மெத்தனமாக இருப்பது குற்றவாளிகளுக்கு துணிச்சலை தருகிறது.