கொடூரமாக கொலை செய்துவிட்டு காதலி உடலுடன் 2 நாட்கள் குடும்பம் நடத்திய காதலன்! சேலத்தில் பயங்கரம்!

சேலம் அருகே அன்னதானப் பட்டிக்கு அருகில் அரிசி பாளையத்தில் உள்ள தனது கல் மாவு மில்லில் காதலியை கொலை செய்து இரண்டு நாட்கள் சடலத்துடன் படுத்துறங்கிய உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


மாவு மில் உரிமையாளரான ரவி என்பவர் அவரது மில்லில் வேலை பார்த்து வந்த சேலம் கொண்டலாம்பட்டி யை சேர்ந்த விதவைப் பெண்ணான பாப்பாத்தி என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பாப்பாத்தி விதவைப் பெண் என்பதால் மாவு உரிமையாளர் ரவிக்கும் பாப்பாத்திக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பின்னர் ரவி பாப்பாத்தியின்  வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான வீட்டு பொருள்கள் மற்றும் குழந்தைகளை கவனித்து கவனித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இருவரும் தினமும் இரவு மில் வேலை முடிந்ததும் மில் அலுவலகத்தில் தனிமையை கழித்ததாகவும் இதனைப் பார்த்த மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலமுறை எச்சரித்தும் உள்ளனர்.

அடுத்து ஓரிரு நாட்களில் மில் பூட்டியிருந்த நிலையில் இதனைப் பார்த்த மில் கூலித் தொழிலாளிகள் மில் விடுமுறை என்று நினைத்து திரும்பிச் சென்றனர். பின்னர் மூன்று நாட்கள் கழித்து மில் அருகாமையில் ஏதோ துர்நாற்றம் வீசுவதை அறிந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாப்பாத்தியின் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

அருகாமையில் மில் உரிமையாளர் ரவி மிகுந்த போதையில் பாப்பாத்தியின் அருகில் படுத்திருந்தார். பின்னர் தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் இந்த சம்பவத்தை தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரவியை எழுப்பி விசாரணை செய்தனர் ரவி உச்சகட்ட போதையில் இருந்ததால் என்ன சொல்வதென்றே தெரியாமல் உலறியபடியே போலீசாரிடம் தகவல் கொடுத்தார்.

பின்னர் இதைத் தொடர்ந்து வந்த கைரேகை நிபுணர்கள் பாப்பாத்தியின் உடலை பரிசோதனை செய்து அவர் அருகில் உள்ள சுவற்றில் தலைமோதி தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது என உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து மில் உரிமையாளர் ரவி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.