ஒரு பெண்..! 3 ஆண்கள்! திமுக ஒ.செவை அலேக்காக தூக்கி காரில் போட்டு பறந்த பரபர சம்பவம்! அதிர்ச்சி காரணம்! சேலம் டென்சன்!

சேலத்தில் திமுக பிரமுகர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் பலவந்தமாக ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் அயோத்தியாபட்டினம் இப்பகுதியில் திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் விஜயகுமார், இவர் தனது உறவினரின் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு உள்ள ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அங்கு அங்கு வந்த கியூ பிரிவு போலீசார் விஜயகுமாரை வாகனத்தில் ஏறும்படி அழைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விஜயகுமார் வாகனத்தில் ஏற மறுத்துள்ளார். மற்றும் அவர்களிடம் நான் ஏன் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என விவாதம் செய்துள்ளார். இதையடுத்து பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையத்திற்கு கியூ பிரிவு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து விஜயகுமார் வீட்டில் யாரோ அவரை கடத்தி விட்டார்கள் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அம்மாபேட்டை காவல் துறையினர் அந்த புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது அங்கு வந்து அவரை அழைத்துச்சென்றது சேலம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் காவலர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலைத்தில் முன்பு திமுக பிரமுகர்கள் ஒன்றுகூடினர். இதையடுத்து இரவு 11 மணி அளவில் விஜயகுமார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் காவல்துறை சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.