அத்தானுடன் தனிமையில் நின்ற மச்சினிச்சி! புதருக்குள் தூக்கிச் சென்று அரங்கேற்றப்பட்ட வக்கிரம்!

சேலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்த காரணத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சேலம் கோட்டகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காலையில் தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப நேரமான காரணத்தினால் தனது அக்காள் கணவருடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறிது தூரம் சென்ற நிலையில் ரோட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வண்டியை நிறுத்தி அக்காள் கணவர் சிறுநீர் கழிப்பதற்காக கீழே இறங்கி நின்று உள்ளனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்கள் அப்பெண்ணின் அக்கா கணவரை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை பலவந்தமாக அருகே உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இந்நிலையில் அடிபட்ட நபர் கூச்சலிட்டுள்ளார், அப்போது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த நிலையில் 5 நபர்களும் சுதாரித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உடனே சம்பவத்தை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை  தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் அருகில் இருந்தவர்களிடம்  இது குறித்து விசாரணை நடத்திய போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள டால்மியா போர்டு, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனே அந்த ஊருக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த மூவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மற்றும் தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் 2 பேரை தனிப்பிரிவு அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.