கணவர் இல்லை..! மாசம் ரூ.2300 தான் சம்பாதிக்குறேன்..! பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியல..! கதறிய தாய்! மயங்கி விழுந்த மகள்! சேலம் அதிர்ச்சி!

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சிறுமி உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது பசியில் மயங்கி விழுந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.


சேலம் மாவட்டம் குகை அருகே ஆண்டிபட்டியில் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த பூபதி ராஜா என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சாமுவேல், 4-ம் வகுப்பு படிக்கும் சுமதி பிள்ளைகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் லட்சுமி வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.

லைன்மேடு, குகை பகுதிகளில் 3 வீடுகளில் வேலை செய்யும் அவருக்கு மாதம் 2,300 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த பணம் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், உணவுக்கு சென்றுவிடுகிறது. அதனால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு சிரமமாக உள்ளது. ரேஷன் அரிசி கூட வாங்கமுடியாமல் தவிக்கும் லட்சுமி தமிழக அரசின் உதவி கேட்டு மனு அளிக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகளுடன் வந்தார்.

அப்போது பசியின் மயக்கத்தில் அந்தச் சிறுமி மயங்கிவிழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்க் சிறுமியைத் தூக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து அமரவைத்து ஆறுதல்படுத்தினர். மயக்கத்திற்கான காரணத்தை அறிந்து, உணவு ஊட்டிய பிறகே பசி மயக்கம் தெளிந்து, சிறுமி அழத் தொடங்கினாள். இதற்கு பிறகு பேசிய லட்சுமி மாதம் அரசாங்கம் எனக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்தால் என் குழந்தைகளைப் படிக்கவப்பேன்

2 வருடமாக உதவித்தொகை கேட்டு மணியனூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன். பரிசீலிக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். தற்போது கூட ஆட்சியரை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் காலையில் சாப்பாடு செய்யாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்க வந்துவிட்டதாக தெரிவித்தார்.