ஜோதிடர் மனைவியை படுக்கையில் வீழ்த்திய 62 வயது தொழில் அதிபர்..! கண்டுபிடித்த கணவன் செய்த பகீர் சம்பவம்! சேலம் பரபரப்பு!

ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் சேலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜோதிடர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியன் சேலத்தில் நண்பர் ஒருவருடன் தொழில் செய்து வந்துள்ளார். குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பாலசுப்ரமணியன் சேலத்தில் ஜோதிடர் இளையராஜா என்பவரின் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதை கண்டுபிடித்த ஜோதிடர் இளையராஜா நாகரிகமாக இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கேட்பதாக இல்லை. பின்னர் கண்டித்தும் பார்த்தார். அப்போதும் இருவருக்குமிடையேயான உறவு மேலும் நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இளையராஜா தொழிலதிபர் பாலசுப்ரமணியனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

இதற்கான தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பாலசுப்ரமணியனை கொலை செய்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காமனேரி கிராமத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் அவரது உடலை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த தகவல் பொதுமக்கள் மூலம் போலீசுக்கு தெரியவரை பாலசுப்ரமணியம் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கொலை நடந்த பகுதியில் வாகன தணிக்கையின்போது காரில் ஜோஸியர் இளையராஜா உள்பட 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் காவல்துறையினரின் கிடுக்குபிடி கேள்விகளில் பாலசுப்ரமணியத்தை கொலை செய்த தகவலை அவர்கள் கூறினர்.