கன்னத்தில் அறை! முகத்தில் குத்து! இடுப்பில் உதை! பாஜக அலுவலகம் சென்ற பியூஸ் மனுஷ்க்கு நேர்ந்த பரிதாபம்!

சேலம் பாஜக அலுவலகத்தில் சமூக ஆர்வலரான பியூஸ் மனுஷ் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த சேலம் பாஜக தொண்டர்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் மற்றும் தர்ம அடி கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமூக ஆர்வலரான பியூஸ் மனுஷ் சேலம் பாஜக அலுவலகத்தில் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது தனது கைப்பேசியில் ஃபேஸ்புக் லைவ் ஆன் செய்தபடி காஷ்மீர் விவகாரம் குறித்து பாஜக தொண்டர்களிடம் கேட்டுள்ளார். அப்போது பாஜக தொண்டரான மணிகண்டன் என்பவர் வலைதளத்தில் அறிவாளியும் கத்தியையும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் காஷ்மீர் பிரச்சனை குறித்து விளக்கம் அளியுங்கள் என பியூஸ் மனுஷ் கேட்டுள்ளார். அதற்கு பாஜக நிர்வாகிகள் உனக்கு ஏன் பதில் அளிக்க வேண்டும்? என அவரை மிரட்டியுள்ளனர். அதற்கு பியூஸ் மனுஷ் நீங்கள் தான் ஆளும் கட்சி நீங்கள் தான் பதில் சொல்லி ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு பாஜக நிர்வாகிகள் பியூஸ் மனுசிடம் நீ ராஜஸ்தானில் இருந்து வந்த வந்தேறி நீ எதற்கு இங்கு வந்து எங்களிடம் கேள்வி கேட்கிறாய்? என கேட்டுள்ளனர். அதற்கு நான் ராஜஸ்தானில் இருந்து வந்தாலும் பூர்வீகம் தமிழ்நாடு தான் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து பாஜக தொண்டர்கள் பியூஸ் மனுஷ் என்பவருக்கு செருப்பு மாலை அணிவித்து வெறுப்பேற்றினர். மேலும் ஆத்திரமடைந்த தொண்டர்கள் அவரை ஒன்றுகூடி கடுமையாகத் தாக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அங்கு வந்து கலவரத்தை கட்டுப்படுத்தி பியூஸ் மனுஷ் அவரை தனிமையில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சில மணி நேரம் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது. ஆனாலும் கூட விடாமல் பாஜகவினர் மாறி மாறி தாக்கினர். முகத்தில் ஓங்கி ஒரு குத்து, தலையில் அடி என சற்று பலமாகவே விழுந்தது.