பசியில் கதறிய குழந்தைகள்! பசியை போக்க விற்க கூடாததை விற்ற ஏழைத் தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!

சேலம் அருகே கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தையின் பசியை போக்க தலைமுடியை விற்ற தாயின் செயலில் நெகிழ்ந்து அவருக்கு சமூக வளைதளங்கள் மூலம் ரூ.1 லட்சத்திற்கு மேல் பண உதவி கிடைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் அருகே உள்ள பொன்னாம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பெயர் பிரரேமா. இந்த தம்பதியற்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் செல்வம் செங்கல் சூளை உரிமையாளரிடம் கடன் வாங்கினார். மேலும், பலரிடன் கடன் வாங்கியதால் ரூ.5 லட்சத்திற்கு மேல் செல்வத்திற்கு கடன் ஏற்பட்டது.  

அனால் செல்வத்தால் கடனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் போல் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மனமுடைந்த செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர்கள் கடனை கேட்க,

பிரேமா வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். ஆனால் மற்றவர்கள் கடனை கேட்டு அடிகடி பிரேமாவிடம் பணம் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்ததால் கடந்த வாரம் பிரேமா தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த செங்கல் சூளையில் வேலை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் பசியால் துடித்த அவரது குழந்தைகளுக்கு பார்த்து கண்ணீர் வடித்த தாய் பிரேமா செய்வதறியாது திகைத்தார்.

பின்னர் குழந்தைகளின் பசியை போக்க தலைமுடியை விற்க முடிவு செய்தார். அதன்படி தலைமுடியை எடைக்கு கொடுத்தார். அதன் மூலம் பிரேமாவிற்கு ரூ.150 கிடைத்தது. அதை வைத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து பசியை போக்கினார். 

தாயின் உன்னதமான செயலை கண்ட சமூக ஆர்வலர் பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் பிரேமாவை சந்தித்து உணவு வழங்கினர். மேலும் சமூக வளைதளங்களில் ஒன்றான முகநூலில் பிரேமாவின் வறுமை குறித்து பதிவிட்டனர்.

இந்த பதிவினை கண்ட பொதுமக்கள் இவருக்கு உதவி செய்ய முன்வந்தன. அதன் மூலம் ரூ.1 லட்சம் கிடைத்தது. மீதமுள்ள பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்து பிரேமாவிற்கு கடன் கொடுத்தவரிடம் வழங்கினர். இதனை பார்த்து பிரேமா ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மேலும், பிரேமாவின் நிலை அறிந்த ஒருவர் ஆவினில் வேலை தருவதாகவும், குழந்தைகளின் படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் அப்பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.