லட்சங்களில் இப்போ வியாபாரம்! இந்து கடவுள்களை கேவலப்படுத்தி புகழ் பெற்ற காரப்பன் சில்க்ஸ்! கோவை அதிர்ச்சி!

இந்து கடவுளை விமர்சித்ததாக புகார் எழுந்ததை அடுத்து மன்னிப்பு கேட்ட தனியார் ஜவுளிக்கடை உரிமையாளர் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.


கோவை சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளரும், தேசிய கைத்தறி நெசவு பயிற்சியாளருமான காரப்பன், சில வாரங்களுக்கு முன்பு கருத்தரங்கில் இந்துக் கடவுள்கள் குறித்து பேசிய கருத்துகள் தீயாகப் பரவியது. இதை அடுத்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியது.

இதுகுறித்து `இந்துக் கடவுளை எப்படி விமர்சிக்கலாம்?' என இந்து அமைப்புகள் காரப்பன் மீது போலீஸில் புகாரும் அளித்துள்ளது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தார் காரப்பன். ஆனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, `காரப்பன் சில்க்ஸை புறக்கணிப்போம்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து காரப்பன் பேசியபோது அரசு ஒதுக்கும் நிதி எல்லாமே அந்த அரசால் இயக்குப்படும் தறிகளுக்கு மட்டுமே செல்கிறது. தனியார் துணிக்கடைகள் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. ஆனால் அரசின் கோ- ஆப்டெக்ஸ் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

மேலும், நெசவைத் தொலைத்துவிட்டு, நிர்வாணமாக நிற்கப் போகிறோமா என்ற ஆதங்கத்தில்தான் அப்படி பேசினேன் என குறிப்பிட்ட காரப்பன், தான் பேசியதை முழுவதுமாக கேட்காமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து பரப்புவது வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும் தான் எந்த கட்சிக்கும் சொந்தக்காரன் இல்லை என குறிப்பிட்ட காரப்பன், `களிப்பறை’ தேவையா, கழிவறை தேவையா என்பதற்கு கழிவறைதான் தேவை என்று சொன்ன மோடியை பெரியாரின் இன்னொரு உருவமாகத்தான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், பட்டுப்புடவை விற்பனையில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. விரைவில் முதல் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று முடித்தார்.