வீதிக்கு வந்த சாமியார்கள்... கோயில் சொத்தை கொள்ளையடிப்பது பாவம் இல்லையோ?

திடீரென மடாதிபதிகளும் சாமியார்களும் வீதிக்கு வந்து பேட்டி அளிக்கிறார்கள்.


அதாவது பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையால்தான் அறங்காவலராக பங்கேற்கிறார்களாம். அவர்களை எல்லாம் சிலை திருட்டு கேஸில் சந்தேகிப்பது எப்படி சரியாகும் என்று கொந்தளிக்கிறார்கள்.

போலீஸ் உடுப்பு மாட்டியவர் எல்லோருமே நல்லவர் என்று சொல்வது போல் இருக்கிறது இந்த விவகாரம். சிலை திருட்டுகளில் மாட்டுபவர்கள் எல்லோருமே பெரிய பெரிய ஆட்கள்தான். ஏனென்றால், அவர்களுக்குத்தான் இதனை எங்கே போய் விற்க முடியும் என்ற சூத்திரமே தெரியும். 

அப்படிப்பட்ட சிலை திருடர்களுக்கு அப்பட்டமாக துணை போகும் வண்ணம், ‘‘கோயில் திருப்பணியில் ஈடுபடுவோர் மீது ஆதாரமின்றி வழக்கு போடக் கூடாது என்றால்..., நீங்கள் சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது மக்களுக்கு தெரியாதா? மாடாதிபதிகளாகிய உங்கள் யோக்கியாதாம்சம் என்பது இவ்வளவு தானா? 

காவி உடையை மாற்றிக்கொண்டு பணக்காரர்கள் வீசும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படுவது இவர்களுக்கே நியாயமாக இருந்தால் சரிதான்.