அந்த ஹீரோ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்! பிரபல கதாநாயகனடன் சேர்ந்து நடிக்க மறுத்த சாய் பல்லவி!

பிரபல நடிகருடன் நடிக்க பிரேமம் புகழ் சாய் பல்லவி மறுத்துவிட்டது அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.


பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். மலர், மலர், என்று ரசிகர்கள் பித்து பிடித்து அலைந்தனர். தனுஷின் மாரி 2 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஆனால் இந்தப் படம் சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றியடையவில்லை. ஆனால் ரவுடி பேபி பாட்டுக்கு சாய் பல்லவி போட்ட ஆட்டம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.

ஆனால் மாரி 2 படத்தில் சாய்பல்லவியின் கதாபாத்திரமும் பேசப்படவில்லை. தெலுங்கில் பாடி  பாடி லெட்சே மனசு என்ற படமும் வெற்றி அடையவில்லை. இரட்டை தோல்வியை சந்தித்து அதிர்ந்து போயுள்ள சாய் பல்லவி  அடுத்த படங்களை, பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் அணில் ரவிபுடி இயக்கும் அடுத்த  படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு சாய்பல்லவி மறுத்துவிட்டார்.

மகேஷ் பாபு தெலுங்கில் முன்னணியில் உள்ள நடிகர். அவருடன் நடிக்க சாய் பல்லவி மறுத்ததற்கு காரணம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு தனக்கு மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்தால் அது பொருத்தமாக இருக்காது என்று சாய் பல்லவி பதில் அளித்து வருகிறார்.

இது ஒரு புறமிருக்க மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதை ரசிகர்களும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மன்டன்னாவை மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.